2025 ஜூலை 19, சனிக்கிழமை

சம்பியனான புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்தி

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 16 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

வட மேல் மாகணத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 21 வயதுகுட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி சம்பியனானது.

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற இத்தொடரில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்ட பாடசாலைகளிலிருந்து சுமார் 15 பாடசாலை அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், இறுதிப் போட்டியில் மாதம்பை அல் மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி சம்பியனாகி மாகாணங்களுக்கிடையிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது.

இவ்வணியைப் பயிற்றுவித்த விளையாட்டு பொறுப்பாசிரியர் என்.எம். அப்ராரின் அயராத முயற்சியால் இந்த வெற்றி இலக்கு அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X