Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்ரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம் தீவகத்தின் வேலணை பிரதேச செயலர் பிரிவிலுள்ள மூன்று விளையாட்டுக் கழகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சிறீதரனின் இவ்வாண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் வேலணை பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று விளையாட்டு கழகங்களுக்கு குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ள.

அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் விளையாட்டுக் கழகம், வேலணை மேற்கு சிற்பனை ஸ்ரீமுருகன் விளையாட்டுக் கழகம், அல்லைப்பிட்டி வெண்புரவி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு இவ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், வேலணைப் பிரதேச சபை உறுப்பினர்களான திரு சிவலிங்கம் அசோக்குமார், பிலிப் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனனர்.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago