Editorial / 2026 ஜனவரி 11 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
கொழும்பு சென் ஜோசப் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற தேசிய செபக்தக்ரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் புத்தளம் செபக்தக்ரோ அணி வெற்றிகளைப் பதிவுசெய்தது.
அணிக்கு இரண்டு பேர் விளையாடும் போட்டியிலும், மூன்று பேர் விளையாடும் போட்டியிலும் புத்தளம் செபக்தக்ரோ அணி வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்து தனது சாதனை கிரீடத்தில் வைரங்களைப் பதித்துக்கொண்டது.
மேலும், 2024 ஆம் அண்டுக்கான அணிக்கு 02 பேர் போட்டியிலும் புத்தளம் செபக்தக்ரோ அணி வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்தது.
இலங்கை தேசிய செபக்தக்ரோ அணியில் ஆண்கள் அணியின் 20 வீரர்களில் 10 பேர் புத்தளம் செபக்தக்ரோ அணியைச் சேர்ந்தவர்களாவர்.
இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 06 வது தெற்காசிய செபக்தக்ரோ சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் தேசிய அணிக்காக விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வீரர்கள் பின்வருமாறு,
ஏ.ஏ. முகம்மது அர்கம், எச்.எச். அதீப் ஹசன், எச்.எச். அசார் ஹுசைன், ஐ.ஏ.எம். இஷாரி, எம். சபர் மர்ஜான்,
எம்.எப்.எம். பதீன், எம்.எச். ஹஸாம் அகமத், டி.எப். துவான் சப்ரான், டி.எச். ஆஸிம் அகமத், டி.எச். சகீ அகமத் ஆகியோர்.
இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர், புத்தளம் மலே அமைப்பினால் புத்தளம் நகரில் ஆரம்பிக்கப்பட்ட செபக்தக்ரோ விளையாட்டு, ஒரு தசாப்த காலத்தில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களை உருவாக்கி வளர்த்துள்ளமை புத்தளத்தைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடியுள்ளனர்.
அது மட்டுமல்ல, பாடசாலை மட்டங்களிலும் விளையாட்டுக் கழகங்கள் மட்டத்திலும் செபக்தக்ரோ விளையாட்டு அணிகள் உருவாக்கப்பட்டு, உள்ளக சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவாக அதிகரித்துள்ளன.
ஒரு விளையாட்டுக்குரிய சமூக அங்கீகாரத்தையும் பல்வித மனித வளங்களையும் இதன் மூலம் பெருக்கிக்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தளத்தின் பெயரையும் இலங்கை தேசத்தின் புகழையும் சர்வதேசத்தில் ஓங்கி ஒலிப்பதற்குரிய சந்தர்ப்பம் செபக் தக்ரோ அணியின் புத்தளம் வீரர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago