2024 மே 01, புதன்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Editorial   / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், டேர்பனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம், தமதணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாக ஆரோன் ஹார்டி, மத்தியூ ஷோர்ட், ஸ்பென்ஸர் ஜோன்சன், தன்வீர் சங்கா ஆகியோர் அறிமுகத்தை  மேற்கொண்டதோடு, தென்னாபிரிக்கா சார்பாக டெவால்ட் பிறெவிஸ் அறிமுகத்தை மேற்கொண்டார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அணித்தலைவர் மிற்செல் மார்ஷின் ஆட்டமிழக்காத 92 (49), டிம் டேவிட்டின் 64 (28) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 227 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (3), ஷோன் அபொட், சங்கா (4), ஜோன்சனிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களையே பெற்று 111 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக மார்ஷ் தெரிவானார்.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி இன்றிரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X