Freelancer / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
தேசிய மட்ட 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்களுக்கான கபடிப் போட்டிகளுக்கு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ஆகியன தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற கபடிப் போட்டிகளின் இறுதியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தை கண்டுமணி மகா வித்தியாலயம் வென்று சம்பியனான நிலையிலேயே இரண்டு பாடசாலைகளும் தேசியத்துக்குத் தெரிவாகியுள்ளன.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்படி கபடி போட்டிகளில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 61 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
பட்டிருப்பு தேசிய பாடசாலை 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
7 minute ago
8 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
14 minute ago