2024 மே 06, திங்கட்கிழமை

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை பிரகாசிப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு. கஜிந்தன்

வட மாகாண ரீதியிலான பளுதூக்கல் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ​செவ்வாய்க்கிழமை(08) நடைபெற்றபோது பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு மூன்று தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்கள் என்பன கிடைத்துள்ளன.

அந்தவகையில் 17 வயதுக்குட்பட்ட பளு தூக்கல் 45 கிலோ கிராம் பிரிவில் 60 கிலோ கிராமைத் தூக்கி வி. ஜஸ்மின் மூன்றாமிடத்தையும், 55 கிலோ கிராம் பிரிவில் 63 கிலோ கிராமைத் தூக்கி நி. நிறுக்சிகா மூன்றாமிடத்தையும், 64 கிலோ கிராம் பிரிவில் 87 கிலோ கிராமைத் தூக்கி ரா. லிசனா முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

அதுபோல 20 வயதுக்குட்பட்ட பளுததூக்கல் 49 கிலோ கிராம் பிரிவில் 42 கிலோ கிராமமைத் தூக்கி சூ. டிலக்சி மூன்றாமிடத்தையும், 55 கிலோ கிராம் பிரிவில் 76 கிலோ கிராமைத் தூக்கி இ. றம்மியா இரண்டாமிடத்தையும், 71 கிலோ கிராம் பிரிவில் 96 கிலோ கிராமைத் தூக்கி வி. ஜெஸ்மினா முதலாமிடத்தையும், 76 kg பிரிவில் 66 கிலோ கிராமைத் தூக்கி அ. சுஜாத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X