2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

பாரதி கிண்ணத்தை வென்ற சென் மேரிஸ் அணி

R.Tharaniya   / 2025 நவம்பர் 12 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன்  உடுத்துறை பாரதி விளையாட்டு கழகத்தினர் வருடம் தோறும் நடத்தும் 2025 ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட  போட்டிகளின் இறுதிப் போட்டி உடுத்துறை பாரதி விளையாட்டு மைதானத்தில் பாரதி விளையாட்டுக் கழக தலைவர் இ.சிந்துயன் தலைமையில், திங்கட்கிழமை (10) நடைபெற்றது. 
 
விளையாட்டு விழாவின் முதல் நிகழ்வாக  விருந்தினர்கள் மைதானம் வரை  வரவேற்கப்பட்டு அங்கு மங்கல விளக்கேற்றப்பட்டதை தொடர்ந்து  தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து அண்மையில் உயிர் நீத்த உறவுகளுக்காக   மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது 
 
தொடர்ந்து இறுதிப் போட்டிகள் ஆரம்பமானது.  உதைபந்தாட்ட போட்டியில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணியினரை எதிர்த்து வெற்றிலைக்கேணி சென் செபாஸ்டியன் அணி மோதியது.  விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இறுதி வரை இரு அணிகளும் எந்த வித கோல்களையும் போடாத நிலையில் தண்ட உதை தீர்மானிக்கப்பட்டது.  தண்ட உதையில் 4 :3எனும் கோல் கணக்கில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான பாரதி கிண்ணத்தை தமதாக்கி கொண்டது 
 
இவ் இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், சிறப்பு  விருந்தினராக மருதங்கேணி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி  அத்துக்கல ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
 
இந்நிகழ்வில்  வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டு கழக வீரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் போட்டிகளை கண்டுகளித்தனர். 
 
 

எஸ் தில்லை நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X