R.Tharaniya / 2025 நவம்பர் 09 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்ட டெனிஸ் விளையாட்டு அரங்கு வியாழக்கிழமை (06) அன்று காலை புத்தளம் மாநகரத்தில், மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாத் அஹ்மத் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை டெனிஸ் சம்மேளனம், கொழும்பு தலைநகருக்கு வெளியே உருவாக்கிய 15 வது டெனிஸ் விளையாட்டரங்கு இதுவாகும். இந்த திறப்பு விழாவின் பிரதம அதிதியாக அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்றத்,மாகாண சபைகள்அமைச்சர், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சந்தனஅபயரத்ன கலந்து கொண்டார்.
புத்தளம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைஸல்,அகில இலங்கை டெனிஸ் சம்மேளன தலைவர் இக்பால் பின் இஸ்ஸாக் உள்ளிட்ட ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை, விமானப் படை,விசேடஅதிரடிப் படை,சிவில் பாதுகாப்புப் பிரிவு,பொலிஸ் ஆகியவற்றின் அதிகாரிகளும், அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது, புத்தளம் மாவட்டத்தின் முதலாவது தொகுதி டெனிஸ் பயிலுனர்களாக மாணவர்களுக்கும், புத்தளம் டெனிஸ் கழகத்திற்கும் டெனிஸ் ரெக்கட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
பிரதம அதிதி அமைச்சர் சந்தனஅபயரத்ன மற்றும் டென்னிஸ் சம்மேளன தலைவர் இருவருக்கும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த டென்னிஸ் அரங்கை புத்தளம் மாநகரில் நிறுவுவதில் பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ அவர்களின் பங்களிப்பு நினைவு கூறத்தக்கது.
கடந்த 2025.09.25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வரங்கில் நிர்மாணப் பணிகள்43 நாட்களில் நிறைவு செய்யப்பட்டது, இவ்வாறானதொரு அரங்கை நிர்மானிப்பதற்கு ஏற்படும் செலவை விட மிகக்குறைந்த செலவில் நிர்மானித்தமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.
இதனை வெற்றிகரமான செயல்திட்டமாக நிறைவு செய்வதில் முறையான திட்டமிடலும் மாநகரசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, அரச திணைக்களங்களின் பங்களிப்பு, குறிப்பாக நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கிய பொது மக்களின் அன்பளிப்பு பிரதான காரணங்களாகும் என மேயர்ரின்சாத் அஹ்மத் தெரிவித்தார்.
எம்.யூ.எம்.சனூன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .