2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் அணியை வென்ற சட்டத்தரணிகள் சங்க அணி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் புதன்கிழமை (17)  நடைபெற்ற கல்முனை   பொலிஸ் நிலைய  அணியுடனான கிரிக்கெட் போட்டியில் கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி வென்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியின் வென்ற பொலிஸ் அணி முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சட்டத்தரணிகள் அணியானது 12 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 73 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்களையே பெற்று ஏழு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X