Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 15 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்
மருதமுனை பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சுற்றுப்போட்டியின் தவிசாளர் எம்.எம். நுசையிர் தலைமையில் (14.05.2023) மாலை நடைபெற்றது.
இதில் திகாமல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
அணிக்கு 9 பேர் கொண்ட 7 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக நடைபெற்ற இப் போட்டியில் பத்து அணிகள் பங்கு கொண்டன இந்த எம்.பி.எல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், இறுதிப்போட்டிக்கு மருதமுனை பி.போ.யூ. வோரியர்ஸ் அணியும் (B4U Warriors) சுனாமி யங்கஸ் அணியும் (Tsunami Youngers) இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் B4U Warriors அணியினர் சம்பியன் அணியாக தெரிவாகி சம்பியன் கிண்த்தையும் நாற்பதாயிரம் ரூபா பண பரிசினையும் பெற்றுக் கொண்டது. இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட சுனாமி யங்கஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 20 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.
24 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
35 minute ago