Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் நடாத்தப்படும் 17 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் லீக் தொடரின் இறுதிப் போட்டியில்ல் மாத்தளை சாஹிராக் கல்லூரி சம்பியனானது.
மாத்தளை சென் தோமஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக கல்லூரியுடனான இறுதிப் போட்டியில் வென்றே சாஹிரா சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாஹிரா 34.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது
பதிலுக்கு 235 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களையே பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
சாஹிராக் கல்லூரியானது மாத்தளை சிங்கள பெளத்த கல்லூரி, மாத்தளை கிறிஸ்துதேவ கல்லூரி, மாத்தளை நாவுல ஸ்ரீநாக கல்லூரி, மாத்தளை கைக்காவல மத்திய கல்லூரி, பண்டாரநாயக்க கல்லூரி என்பவற்றை வெற்றி கொண்டதன் மூலம் மாத்தளை மாவட்ட குழுநிலை சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
41 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
8 hours ago