Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் புத்தளம் அல் அஷ்ரக் அணி வெற்றி பெற்றுள்ளது.
புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் பலம் வாய்ந்த நியூ ஸ்டார்ஸ் அணியை புத்தளம் லீக்கில் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ள அல் அஷ்ரக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டதன் மூலம் அவ்வணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.
அல் அஷ்ரக் அணிக்காக, என்.எம். நுஷ்கி, வீ. யோவான், எம்.எம். சபாக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நடைபெற்ற தொடரின் ஆரம்ப நிகழ்வில் அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன கலந்து கொண்டார். புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் கால்ப்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026