2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

முல்லை மாந்தை கிழக்கு விநாயகபுரம் பாடசாலை பிரகாசிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 22 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஷ்ணகுமார்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான, மல்யுத்தம், யூடோ தைக்குவாண்டோ போட்டிகளில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு விநாயகபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சாதனை படைத்துள்ளது.

முல்லைத்தீவு உள்ளக அரங்கில் அண்மையில் நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் விநாயகபுரம் அ. த. கவின் எட்டுப் பேர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

இம்மாணவர்களுக்கு பாடசாலையில் அதிபர் தலைமையில் வெற்றிக்கு ஆதரவாக செயற்பட்டவர்களையும் அழைக்கப்பட்டு  இச் சாதனையை நிலைநாட்டிய மாணவர் பாடசாலையின் அனைத்து மாணவர்கள் முன்னிலையில்  கெளரவிக்கப்பட்டனர்.

மல்யுத்தத்தில் இரண்டு முதலிடங்களையும், நான்கு மூன்றாமிடங்களையும், தைக்குவாண்டோவின் ஒரு இரண்டாமிடத்தையும், 3 மூன்றாமிடங்களையும், ஜூடோவில் ஒரு முதலாமிடத்தையும், மூன்று இரண்டாமிடங்களையும், 4 மூன்றாமிடங்களையும் இப்பாடசாலை பெற்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .