Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்

பாகிஸ்தானில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணேஷ் இந்துகாதேவிக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு பதக்கங்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago