Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
பள்ளிவாசல்துறை லிவர்பூல் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் சிரேஷ்ட வீரர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அப்பிரதேசத்தில் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை பிரபல்யப்படுத்தும் வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கரப்பந்தாட்டத் தொடரானது பள்ளிவாசல்துறை பொது கரப்பந்தாட்ட மைதானத்தில் பகல் இரவு போட்டியாக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தொடரில் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டும் தற்போது உள்ள கனிஷ்ட அங்கத்தவர்களை மூன்று அணிகளாகவும் பிரித்தும் போட்டிகள் நடாத்தப்பட்டன.
சிரேஷ்ட உறுப்பினர்களுக்கான போட்டியில் ஆர்.டீ. பி அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.
கனிஷ்ட அங்கத்தவர்களுக்கான அணியினரான லிவர்பூல் சீ அணியினர் கனிஷ்ட பிரிவு சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தனர்.
இத்தொடரில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட உறுப்பினர்களும் பங்குபற்றி தமது திறமையை வெளிக்காட்டியதுடன், அவர்களுக்கு பதக்கமும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago