Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2023 மார்ச் 21 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். நூர்தீன்
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தேசிய ரீதியில் வரலாற்று சாதனையை முதற்தடவையாக பெற்றுக் கொடுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்றது.
தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ், பணப்பரிசு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இச்சாதனையைப் படைப்பதற்காக பயிற்சியை வழங்கிய பயிற்றுவிப்பாளர் வே. திருச்செல்வத்துக்கு சிறைச்சாலை அத்தியட்சகரால் கௌரமளிக்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை சிறைச்சாலைகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டிகளில் ஒன்பது தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 15 பதக்கங்களைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சம்பியனாக மட்டக்களப்பு சிறைச்சாலை வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் மட்டக்களப்பு சிறைச்சாலை சார்பாக பங்குபற்றிய சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவபாலன் தேசிய ரீதியில் இலங்கை மல்யுத்த வீரர் குழாமில் இடம்பிடித்து இலங்கை சிறைச்சாலை திணைக்களத்துக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இவருக்கும் இந்நிகழ்வின்போது கௌரவமளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago