Freelancer / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரில், பல்லேகலவில் திங்கட்கிழமை (07) யநடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் உடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரைக்கர்ஸ், பதும் நிஸங்கவின் 36 (35), லஹிரு உதாரவின் 29 (25), மொஹமட் நவாஸின் 27 (20), அணித்தலைவர் பாபர் அஸாமின் 24 (21), சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 21 (18) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், டுனித் வெல்லலாகே 3-0-9-2, டில்ஷான் மதுஷங்க 4-0-23-2, மகேஷ் தீக்ஷன 4-0-21-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ், நிஹ்சான் மதுஷ்கவின் 46 (32), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 39 (21), அணித்தலைவர் திஸர பெரேராவின் 17 (07), தெளஹிட் ஹிரிடோயின் ஆட்டமிழக்காத 14 (09) ஓட்டங்களோடு 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் நசீம் ஷா 3.3-0-22-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக வெல்லலாகே தெரிவானார்.
இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற கோல் டைட்டான்ஸுடனான போட்டியில் பி-லவ் கண்டி வென்றது.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026