Janu / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரிடம் கைத்துப்பாக்கியை காண்பித்து சுமார் 207,500 ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் தொடுவாவ பொலிஸில் பதிவு செய்த முறைப்பாட்டிற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வர்த்த நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கமராக்களை பரிசோதனை செய்து, சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ரஸீன் ரஸ்மின்
10 minute ago
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
2 hours ago