Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 30 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மலர உள்ள சர்வதேச சகோதரிகள் தினத்தை கொண்டாட உள்ளது என அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் வளாகத்தில் மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறும்.
இந்நிகழ்வில் பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளன.
இதில் விசேஷ அம்சமாக பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறும்படத்துக்கான கதை சொல்லும் நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு கதை சொல்ல முடியாதவர்கள் பிரதிகள் மூலம் கலந்து கொள்ள முடியும்.
பிரதிகள் அன்றைய தினம் வாசிக்கப்பட்டு அவையோரின் தீர்ப்புக்கு ஏற்ப ஒரு கதை தெரிவு செய்யப் படுவதுடன் அது திரைவடிவம் பெறும்.
இதில் கலந்து கொள்ள விரும்பு வோர் 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறியலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
32 minute ago
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
31 Jul 2025