2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜேர்மன் நாட்டு குழுவினர் விமானப்படை தளபதியை சந்தித்தனர்

J.A. George   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மன் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்  கேப்டன் ஜெரால் கோச் ( Gerald Koch) உள்ளிட்ட குழுவினர், இலங்கை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்து நேற்று (05) கலந்துரையாடினர்.

கேப்டன் ஜெரால் கோச் ( Gerald Koch) இந்தியாவில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரகத்தின் பிரதான பாதுகாப்பு ஆலோசகர் ஆவர்.

அவர் உத்தியோக பூர்வமான இந்த விஜயத்தின் மூலம் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தது இதுவே முதல் தடையாகும். 

இந்த சந்திப்பின்போது  இருநாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பங்களிப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில்  இலங்கையின் ஜேர்மன் தூரகத்தின் துணைத்தூதுவர் ஒலாப் மல்கோவ் ( Olaf Malchow) மற்றும் இந்திய ஜேர்மன் தூரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லேப்ட்டினால் கேர்ணல் ஜான் சிஹார் (Jan Cihar) மற்றும்  இலங்கையின் ஜேர்மன் தூரகத்தின் வணிக மற்றும் அரசியல் ஆலோசகர் திருமதி . தரணி தளுவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது இருதரப்பினருக்கும் இடையிலான  நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .