R.Tharaniya / 2025 நவம்பர் 19 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி புதுக்குடியிருப்பு, அல்மனார் மற்றும் கண்டக்குழி ஆகிய பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி - அல் மனார் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞரை கைது செய்து விசாரிக்கப்பட்ட போது அவரிடமிருந்து 800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரிடமிருந்து 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் , கண்டக்குழி பகுதியில் ஒருவரிடம் இருந்து 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனை நடத்திய அதிகாரிகள், சந்தேக நபர்கள் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் தலா 300 ரூபாய்க்கு விற்பனை செய்வதையும் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி மொத்தமாக கைப்பற்றப்பட்ட 1500 போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி 45 இலட்சமாகும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026