Janu / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹ, மொரகொட, ஹல்மில்லேவ பகுதியில் வைத்து யானை தந்தங்களுடன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மொரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நமல்புர, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹல்மில்லேவ பகுதியில் சந்தேக நபரால் பராமரிக்கப்பட்டு வந்த சேனை பயிர்ச்செய்கைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இரண்டு தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், இந்த தந்தங்கள் சுமார் ஒரு அடி நீளம் கொண்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago