Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்வதற்கு தள்ளிக்கொண்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் லொறி ஒன்றுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வென்னப்புவ, தும்மலதெனிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ரதுகமகே அஷோர் ரவி பெர்னான்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளின் கிக் பெடல் வேலை செய்யாததால் அவர் தனது மோட்டார் சைக்கிளை தள்ளி ஸ்டார்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எப்போதும் போல், செவ்வாய்க்கிழமை (23) தனது மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்வதற்காக தள்ளிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து ஒரு திசையில் சாய்ந்துள்ளதுடன் குறித்த நபர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago