2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

விபத்தில் முதியவர் பலி ; லொறி சாரதியும் வைத்தியசாலையில்

Janu   / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 16 ஆம் மைல்கல் பகுதியில் புதன்கிழமை (01) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தை தொடர்ந்து லொறி சாரதிக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற மிதிவண்டி மீது, அதே திசையில் பின்னால் வந்த லொறி மோதியதிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் சாலியவெவ – இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த அம்பாவலகே வெல்ஜின் சில்வா (78 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர், முதலில் அழுத்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதேவேளை, லொறியைச் செலுத்தி வந்த தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த சாரதி, விபத்து இடம்பெற்ற இடத்தில் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் அழுத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாலியவெவ பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 எம்.எச்.எம். சியாஜ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .