2025 மே 02, வெள்ளிக்கிழமை

நெஞ்சம் தொடாத உறவு நூல் வெளியீடு

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் எழுத்தாளர் மு.வரதராசாவின் நெஞ்சம் தொடாத உறவு எனும் நூல் வெளியீட்டு விழா சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜெகநாதன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச நவீன கல்லூரி மண்டபத்தில் நூலாசிரியர் மு.வரதராசாவினால் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந் நூலின் விமர்சனத்தை கவிஞர் க.இரத்தினவேல் மற்றும் ஓய்வுநிலை சிரேஷ்ட கணக்காளர் ஏ.ரவீந்திரன் ஆகியோர் செய்ததுடன் முதல் பிரதியை திருக்கோவில் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஜனாப்.ஏ.ஜீ.நிசாம் மற்றும் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அதிதிகளும் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது, எழுத்தாளர் மு.வரதராசா, கவிஞர் க.இரத்தினவேலால் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X