Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஜே.எம்.ஹனீபா
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் ஆய்வு உத்தியோகத்தர் கலாபூஷணம் மௌலவி ஏ.சீ.ஏ.எம்.புஹாரியின் 'வரலாற்றிலோர் ஏடு' நூல் அறிமுக விழா நாளை சனிக்கிழமை (13) மாலை 4.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி
எம்.எம்.நௌஷாத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர்; ஹாபீஸ் நஸீர்; அஹமட் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், விசேட அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர்; பைஸால்
காஸீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்; ஏ.எல்.எம்.நஸீர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலான உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில், நூலின் முதற் பிரதியை சிரேஷ்ட ஊடகவியலாளர்; புரவலர் தேசமான்ய மனிதநேயன் இர்ஷாத் ஏ.காதரும் நூலின் ஆய்வுரையை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை நெறி பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.மஸாஹீரும் நிகழ்த்தவுள்ளனர்.
24 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago