Freelancer / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப். முபாரக்
கிழக்கு மாகாணத்தில் 45 நாள்களுக்குள் 1,363 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டு உள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணரும் சமூக வைத்திய நிபுணருமான டொக்டர் எஸ். அருள்குமரன் தெரிவித்தார்.
டெங்கு தொற்று தொடர்பில் நேற்று முன்தினம் (20) கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது; கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 780 டெங்கு நோயாளர்களும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 203 டெங்கு நோயாளர்களும், அக்கரைப்பற்றில் 148 நோயாளர்களும் அட்டாளைச்சேனையில் 118 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 25 நோயாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 243 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 87 நோயாளர்களும், உப்புவெளி பகுதியில் 58 நோயாளர்களும், மூதூர் சுகாதார அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 24 டெங்கு நோயாளர்களும், கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 19 நோயாளர்களும், கிண்ணியாவில் 18 நோயாளர்களும், குச்சவெளியில் 16 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
ஆகவே, பொதுமக்கள் சுற்றுப்புற சூழல்களைச் சுத்தமாகவும் டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் காணப்படும் பொருட்களை அகற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago