Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் அரச உத்தியோகத்தர் என்று தன்னை அறிமுகப்படுத்தி வயோதிபர்களிடம் அஸ்வெசும திட்டத்தில் தங்களின் பெயர் வந்துள்ளது என்று கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அம்பலமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
குறித்த நபர் கந்தளாய் ஆரியவங்ச மாவத்தை வாத்தியகம வட்டுக்கச்சி மற்றும் லைட்வீதி போன்ற பகுதிகளில் தன் கைவரிசையை காட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
தங்களுக்கு அஸ்வெசும திட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி இப்பகுதிகளில் நான்காயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் இவ் விடயம் குறித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
சந்தேக நபர் நடமாடியமை தொடர்பாக அப்பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
எப்.முபாரக்
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago