Janu / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக மாணவர்களின் பங்களிப்புடன் மாத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ் தலைமையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்-ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பகுதிகளை திறந்து வைத்ததுடன் மாணவர்களால ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் பங்கு கொண்டனர்.
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் புனரமைக்கப்பட்ட பெயர்ப்பலகை, சுற்றுச்சூழல் அழகுபடுத்தல், கட்டிடங்களுக்கான நிறப்பூச்சு, பீடத்துக்கு என அழகிய கூட்ட மண்டபம், புனரமைக்கப்பட்ட பீடாதிபதியின் காரியாலயம், பீடத்தின் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் என்பன மாணவர்களால் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ், குறித்த வேலைத்திட்டங்களை தாங்கள் முன்னெடுப்பதற்கு ஒத்துழைத்த அத்தனை தனிநபர்களுக்கும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் குறிப்பாக ஒத்துழைப்பு வழங்கி பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் விஷேடமாக பூரண ஒத்துழைப்பு வழங்கிய பீடாதிபதி அஷ்-ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வாறான பணிகளை ஏனைய பீடங்களும் கையாண்டு தங்களது பீடங்களை அழகுபடுத்த முனைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .