Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலே பலியானதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பாவற்கொடி சேனை, பழங்குடியிருப்பு மடு எனும் இடத்தில் திங்கட்கிழமை (20) இரவு இடம் பெற்றதாக தெரியவருகிறது.
பாவற்கொடி சேனை , கண்ணகி நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே இவ் விபத்தில் பலியானவராவார்.
தனது உழவு இயந்திரத்தால் வயல் உழவு வேலைகளை மேற்கொண்டு விட்டு வீடு செல்கையிலே இவ் அனர்த்தம் இடம் பெற்றதாக தெரிய வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.
இதேவேளை இவ்விபத்து சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
19 minute ago