Janu / 2025 நவம்பர் 20 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தவிசாளர் பதவியை பெற்றுக்கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி மற்றும் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டது.
அந்த வெற்றிடத்திற்கான தவிசாளர் தெரிவு வியாழக்கிழமை (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் அஸ்மி தலைமையில் இடம்பெற்றது
இதன் போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டார்
இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேற்சை உறுப்பினர், தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் புதிய தவிசாளருக்கு ஆதரவுகளை வழங்கி இருந்தனர்.
எம் எஸ் எம் நூர்தீன்

58 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
9 hours ago
9 hours ago