Freelancer / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பத்மவாசன் நேற்று முன்தினம் (20) மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்து, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் பயிற்சி பட்டறையை நடத்தினார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆலயத்தில் குருகுல மாணவர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கை நடத்தினார். ‘ஒவியத்தினுடாக இறைவனை காணலாம்’, ‘நாவலர் பெருமான் - வாழ்வும் வாக்கும்’ போன்ற தலைப்பில் வரைதலுடான கருத்துரை வழங்கப்பட்டது.
உலக ஓவியர் பத்மவாசன், சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago