2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கடல் அட்டைகளைப் பிடித்த மூவர் கைது

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு கல்குடா கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப்  பிடித்துக் கொண்டிருந்த மூன்று மீனவர்களை நேற்றிரவு (11)  கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கடற்படைப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த மீனவர்கள் பயன்படுத்திய படகு, 65 கடல் அட்டைகள், ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஏனைய கடல் தொழில் உபகரணங்களைக்  கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.



கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனவும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்  கடற்படையினர்  தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .