Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் ஆணொருவரின் சடலம், நேற்று (24) மீட்கப்பட்டுள்ளது.
நீலம்,சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை கலந்த சாரத்தையும் மற்றும் வெள்ளை நிறத்திலான சேட் அணிந்துள்ளார். அந்த சேட்டில், சிறு கோடுகளும் உள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி மதுரங்குடா பகுதியில் ஆணொருவர் விழுந்து கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், சோதித்தபோது, அவர் இறந்துவிட்டார் என கண்டுகொண்டனர். அதனையடுத்து, குறித்த சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து வந்துள்ளனர்.
அந்த சடலத்தில் இரண்டு கைகளிலும் காயங்கள் இருப்பதுடன் ,முகத்தில் சில இடங்களில் காயங்களும் உள்ளன.
அந்த சடலத்தை பார்வையிட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர பொறுப்பதிகாரி, .பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பணித்துள்ளார்.
சடலத்தை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள குச்சவெளி பொலிஸார், சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
57 minute ago
3 hours ago
4 hours ago