Freelancer / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
37 வருடகால கல்விச் சேவையில் இருந்து ஓய்வுபெறும் அதிபர் க. பேரின்பநாதனின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நாளை (22) காலை 9.30 மணியளவில் மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது ‘பேரின்பம்’ என்ற சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
பொலன்னறுவ சுங்காவில் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக 15.07.1985ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்ற இவர் 1994ஆம் ஆண்டு மூதூர் - லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 2-II அதிபராகவும், 2010ஆம் ஆண்டு கிளிவெட்டி மகாவித்தியாலயத்தில் தரம் 2-I அதிபராகவும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் தரம் I அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் 2022.12.31 அன்று 37 வருடகால கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026