Freelancer / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(13) மாலை ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
கல்முனை பேரூந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை(13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவுக்குச் சொந்தமான அரச பேருந்து ஒன்றில் ஒலுவில் பகுதியை சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.
பெரிய கல்லாறு பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேச செயலக சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் மற்றுமொரு பயணியும் பயணித்துள்ள நிலையில் 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பேரூந்துக்குள் தவறி விழுந்து விட்டது.
இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் கண்டெடுத்து பேரூந்து நடத்தினருக்கு தெரியப்படுத்தியதுடன் உரிய நபரிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தங்கச் சங்கில் காணாமல் போயிருந்ததை அறிந்துள்ளார். இந்நிலையில், தான் பயணம் செய்த பேருந்து நினைவு வரவே பேரூந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பேரூந்து நடத்துநரின் தனது நடந்த விடயத்தை தெளிவு படுத்தியுள்ளார்.
இதன் போது பேரூந்து நடத்துநரும் மாலை ஒன்று பேரூந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் அவரை தொடர்பு கொண்டு உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய பொலிஸ் நிலையத்தில் வைத்து உரியவரிடம் தங்கச் சங்கில் கையளிக்கப்பட்டுள்ளது.

3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago