Freelancer / 2022 ஜூன் 12 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை உடைத்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் இன்று (12) இதனை தெரிவித்தார்.
வாழைச்சேனை, கிண்ணியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை உடைப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் யாசகம் பெறுபவர்களைப் போன்று நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இவர்களை கைது செய்வதற்கான விசேட பொலிஸ் குழு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மின்சாரம் தடைப்படும் போது பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago