Editorial / 2025 மார்ச் 21 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
உள்ளூராட்சி தேர்தலுக்கான அம்பாறை மாவட்டத்தில் ஏலவே நீதிமன்ற செயல்பாடு காரணமாக விடுபட்டு இருந்த தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகி உள்ளது என்று அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
மேலும் ஏலவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் இரு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏக காலத்தில் நடைபெறவுள்ளன.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த (17) திங்கட்கிழமை ஆரம்பமான வேட்புமனு தாக்கல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 மற்றும் உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 20ஆகும்.
ஆனால் , கல்முனை மாநகர சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நீதிமன்ற காரணங்களால் தற்போது நடைபெறமாட்டாது. ஏனைய 18 சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தற்போது தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நீதிமன்ற விடுவிப்பு காரணமாக, ஏனைய 18 சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் அதே தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago