Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம் அஹமட் அனாம்
கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நான்கு வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட அமர்வு, இரண்டாவது முறையாக தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தலைமையில் நேற்று (29) சபை மண்டபத்தில் நடைபெற்றது.
14.12.2022 அன்று சமர்பிக்கப்பட்ட வரவு - செலவு திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தவிசாளரால் மீண்டும் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டது. இதன்போது, வரவு - செலவு திட்ட வாசிப்புக்கு ஆதரவாக ஒன்பது வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆறு உறுப்பினர்களும் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவருமாக ஒன்பது பேர் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த உறுப்பினர் அமர்வுக்கு சமூகமளித்திருக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆறு பேரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூன்று பேரும் ஐ.தே.க உறுப்பினர்கள் இருவரும் நல்லாட்சிக்கான இயக்க உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ஒருவரும் என 13 பேர் திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இச்சபையானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026