Janu / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் வீதியில் அனுமதிக்க முடியாத எட்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் எட்டு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர் என நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மோட்டார் சைக்கிளானது போட்டிக்காக கொண்டு வந்ததாகவும் இதில் ஆறு மோட்டார் சைக்கிளுக்கு அனுமதிப் பத்திரம் இல்லை என்பதும் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் எனவும் தெரியவருகிறது.
குறித்த கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சுமார் 20 தொடக்கம் 25 வயதுடைய நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்களை உரிய மோட்டார் சைக்கிளுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கீத்


4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago