2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Ilango Bharathy   / 2022 ஜனவரி 07 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய நால்வரைப் பொலிஸார் நேற்றைய தினம்(06) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் , மோட்டர்சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாந்தோட்டம், வட்டினாக்கலை அம்பாறை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .