2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டக்களப்பில் 2வது கொரோனா தடுப்பூசி

Editorial   / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையினருக்கு கொரோனா தடுப்பு இரண்டாவது ஊசி ஏற்றும் நடவடிக்கை சம்பிரதாயபூர்வமாக இன்று (30) மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி காரியாலயத்தில் அதன் பணிப்பாளர் வைத்தியர் கிரிசுதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுகாதார துறையினருக்கு முதலாவது ஊசி ஏற்றப்பட்டது. இருந்தபோதும் இந்த இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், தாதியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசியை ஏற்றினர் 

இன்று மட்டும் 90 பேருக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் நாளை (01) இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடமபெறுமென மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி கிரிசுதன் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் சுகாதாரதுறையினருக்கு தடுப்பூசி  ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .