2025 ஜூலை 09, புதன்கிழமை

‘மட்டக்களப்பில் 997 ஆக கொரோனா அதிகரிப்பு’

Editorial   / 2021 ஏப்ரல் 24 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் 14 மற்றும் 16 வயதான சிறுவர்கள் இருவருக்கு கொரோனோ தொற்றியிருப்பது இன்று சனிக்கிழமை (24) கண்டறியப்பட்டது.

“அவர்களுடன் சேர்த்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் 997 பேர் கொரோனா பேராக அதிகரித்துள்ளது” என மட்டக்களப்பு பிராந்த சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் 100 பேருக்கு  நேற்று (23) வெள்ளிக்கிழமை அன்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்த அவர்,  அதில், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நால்வருக்கு கொரோனா தொற்றுதி கண்டறிய ப்பட்டதையடுத்து இரு வகுப்பறைகள் மூடப்பட்டு 80 ஆசிரிய மாணவர்களை  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

“இதனையடுத்து கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்ட ஆசிரியர் பயிற்சி  மாணவர்களின் உறவினர்களான 14, 16 இருசிறுவர்களுக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டு அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதேவேளை வியாழக்கிழமை மேற்கொண்ட பிசோதனையில் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டு அவர்கள் வைத்தியசாலைகயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .