R.Tharaniya / 2025 ஜூலை 27 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் சனிக்கிழமை (26) அன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் காலை 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் எட்டு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, பதாதையினை ஏந்தியவாறும், சம நீதி கோரிய கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது கையொப்பத்தினையும் பதிவு செய்தனர்.




எம் எஸ் எம் நூர்தீன்
9 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago