R.Tharaniya / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (12) அன்று கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பகுதியில் இருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற காரும் வாழைச்சேனை பகுதியில் இருந்து கிரான் பிரதேசத்தை நோக்கி சென்ற சிறிய எல் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்



10 minute ago
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
2 hours ago