Freelancer / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் எல்லைகளை அடையாளப்படுத்தி தந்துதவுமாறு கோரி, மாஞ்சோலை பிரதேச சமூக அமைப்புக்களினால் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராசாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார் மற்றும் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி தலைமையிலான குழுவினர் மகஜரைக் கையளித்தனர்.
அண்மைக்கால மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட காணிகளை கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், அத்துமீறி எல்லை இடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனைக்கருத்திற்கொண்டே ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லையை அடையாளப்படுத்துமுகமாக இக்கோரிக்கை சமூக மட்ட அமைப்புக்களினால் விடுக்கப்பட்டுள்ளது.

4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago