2025 ஜூலை 09, புதன்கிழமை

மியான்குளம் விபத்தில் இருவர் மரணம்

Editorial   / 2021 மே 07 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஆர்.ஜெயஸ்ரீராம்

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிாிவிற்குட்பட்ட மியான்குளப் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம், வியாழக்கிழமை (06) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என  வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அதி சொகுசு தனியார் பஸ் வண்டி உரிமையாளரான பரமேஸ்வரன் தனுஜன் மற்றும் மாவடிவெம்பை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்டவருமான டினேகா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவ்விருவக்கும் 31 வயதாகும்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்தபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த ​வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .