Niroshini / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்களில் அத்தியவசிய உணவுப் பொள்;கள் விற்பனையின் போது இடம்பெறும் முறைகேடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என, பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி மயோன் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்முறைகேடுகள் நிரூபிக்கப்படுமாயின் சம்மந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், பொது மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருள்;களை சதொச நிலையங்கள் மூலம் நிர்ணய விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அம்பாறை மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்கள் மூலமாக பொது மக்களுக்கு சரியான முறையில் இவ்வுணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், அவற்றைப் பதுக்கி வைத்து, மொத்த வியாபாரிகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தம்மிடம் முறைப்பாடு செய்து வருகின்றனர் உனவும், அவர் சாடியுள்ளார்.
குறிப்பிhக, டின் மீன்கள், மைசூர் பருப்பு, பெரிய வெங்காயம், கோதுமை மா, பால்மா, அரிசி, சீனி போன்ற பொருட்கள், இந்த சதொச நிலையங்களுக்கு நாளாந்தம் வருகின்ற போதிலும், மக்களுக்கு நேரடியாக நிர்ணய விலையில் இந்தப் பொருள்களை வழங்காமல், அவற்றை பதுக்கி வைப்பதும் மொத்த வியாபாரிகள் மற்றும் தெரிந்தவர்களுக்கு மாத்திரம் கொடுப்பதும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் அநீதியாகும் எனவும், அவர் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், உயர் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட சதொச பொறுப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஏதாவது அத்தியாவசிய பொருள்கள் குறைவாக இருப்பின் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சர்கள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து தருவதற்கு, தான் தயாராக இருப்பதாகவும் சதொச நிலையங்களின் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துக் கொள்வதாகவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago