2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி, ஒருவர் உயிரிழப்பு

Janu   / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சேருநுவர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கித்சிறி விஜேயபிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புதன்கிழமை (25) இரவு 10.00 மணியளவில்,  மோட்டார் சைக்கிளில் எரிபொருள் பெறுவதற்காகச் சென்றுகொண்டிருந்த போதே வீதியில் நின்ற யானை இவரைத் தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இவரை, உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் (1990) மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ. நூருல்லா வியாழக்கிழமை (26) அன்று நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார். அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .