Janu / 2024 நவம்பர் 17 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திகாமடுல்ல மாவட்டத்தில் சுயேட்சை குழு ஒன்றில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.ஏ.எம்.இத்ரீஸின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள இவரது வீட்டின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12) இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவ தினம் அவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே இனம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளதுடன் ஏனைய பொருட்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம். எப். றிபாஸ்

33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
50 minute ago